×

குணச்சித்திர நடிகைகளின் திடீர் மாற்றம்

ஹீரோயின்கள் மட்டும்தான் தங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட ேகரக்டர்களில் நடிப்பார்களா என்ன! குணச்சித்திர நடிகைகள் கூட கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை தேர்வு செய்து, அதில் கதையின் நாயகியாக நடிப்பார்கள் என்பதை சமீபத்தில் நிரூபித்தவர், திரைக்கு வந்த ‘அங்கம்மாள்’ என்ற படத்தில் சிறப்பாக நடித்திருந்த கீதா கைலாசம். இதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கதையின் நாயகியாக ராதிகா நடித்துள்ள படம், ‘தாய்கிழவி’. இதில் அவர் பவுனுத்தாயி என்ற கேரக்டரில் நடிக்கிறார்.

தற்போது அவர்கள் வரிசையில் சீனியர் நடிகை வடிவுக்கரசி இணைந்துள்ளார். கதையின் நாயகியாக அவர் நடிக்கும் படத்துக்கு ‘கிரானி’ (Granny) என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘கிரானி’ என்பதற்கு ‘பாட்டி’ என்று அர்த்தம். இப்படத்தில் 80 வயதை தாண்டிய முதிய பெண்ணாக வடிவுக்கரசி நடிக்கிறார். திலீபன், அபர்ணா, கஜராஜ் நடிக்கின்றனர். விஜயகுமாரன் இயக்குகிறார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்ய, செல்லையா பாண்டியன் இசை அமைக்கிறார். பேய் திரில்லர் படமான இதில் சூனியக்காரி வேடத்தில் வடிவுக்கரசி நடிக்கிறார்.

Tags : Geetha Kailasam ,Radhika ,Sivakarthikeyan ,Paunuthai ,Vadivukkarasi ,
× RELATED துப்பாக்கி, பில்லா 2 பட வில்லன் வித்யூத் ஜம்வால் நிர்வாண ‘போஸ்’