×

ஆண்களால் பாதிக்கப்பட்ட பார்வதி திருவோத்து

தன்னுடைய குழந்தை பருவத்தில் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார், பார்வதி திருவோத்து. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனக்கு அப்போது சிறுவயது. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ரயில் நிலையத்தில் அம்மாவை விட்டுவிட்டு அப்பாவுடன் திரும்பி வரும்போது, ஒருவர் வந்து மார்பில் அடித்துவிட்டார். அது தொடுவது போல் கூட இல்லை. என்னை அறைந்தது போல் இருந்தது. அப்போது நான் குழந்தையாக இருந்தேன். அந்த வலியை இன்றும் நினைவில் வைத்துள்ளேன். தெருவில் எப்படி நடக்க வேண்டும் என்று அம்மா எனக்கு கற்றுக்கொடுத்தார்.

கடை ஜன்னல்களில் பொருட்களை பார்க்காதே. ஆண்களின் கைகளை பார்த்துக்கொண்டே நடக்க வேண்டும் என்று, ஒரு தாய் தனது குழந்தைக்கு இப்படி கற்றுக்கொடுக்க வேண்டிய சூழலை கற்பனை செய்து பாருங்கள். மேலும் சில ஆண்களிடம் இருந்து பல சம்பவங்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஒருவர் தனது வேட்டியை தூக்கி காட்டினார். அப்போது எனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. பல ஆண்டுகள் கழித்து அதுபற்றி திரும்பி பார்க்கும்போது, இத்தகைய அனுபவங்கள் எனது உடலிலும், மனதிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை உணர்ந்துள்ளேன்’ என்றார். அவரது பேச்சு திரையுலக வட்டாரத்தில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Parvathy Thiruvothu ,
× RELATED தமன்னா நடிக்கும்‘ஓ ரோமியோ’