பூஜா ஹெக்டேவின் பிட்னஸ் ரகசியம்

சென்னை: தமிழில் ‘முகமூடி’, ‘பீஸ்ட்’, ‘ரெட்ரோ’ ஆகிய படங்களில் நடித்த பூஜா ஹெக்ேட, ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்தில் இடம்பெற்ற ‘மோனிகா’ பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘காஞ்சனா 4’ படத்தில் நடிக்கிறார். அவர் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படம் எப்போது திரைக்கு வரும் என்று தெரியவில்லை. 2010ல் ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் பங்கேற்று இரண்டாவது ரன்னர்-அப்பாக வந்த பூஜா ஹெக்டே, தனது அழகு ரகசியம் குறித்து பேசியிருக்கிறார். அது வருமாறு:

தேங்காய் எண்ணெய் போன்ற சிறந்த பொருளை நாம் கண்டுபிடிக்கவே முடியாது. அந்த அளவுக்கு அதில் மேஜிக் இருக்கிறது. அதுபற்றி அனைவருக்கும் முழுமையாக பரிந்துரைப்பேன். மஞ்சள் மற்றும் நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்த பாலின் மேலுள்ள பாலாடைக்கட்டி ஆகியவையே எனது சிறந்த ஃபேஸ் மாஸ்க். ஹெவி மேக்கப்பில் கவனம் செலுத்துவதை விட, பொலிவான சருமம் கிடைக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவதே எனது ஸ்டைல். எனக்கு குறைவான மேக்கப் போட்டாலே போதும்.

எனது தனித்துவம் குறித்து வெளியே தெரியும். காலையில் எலுமிச்சை சாறு கலக்கப்பட்ட வெதுவெதுப்பான நீர், புரதம் நிறைந்த முட்டையின் வெள்ளைப்பகுதி, அவகேடா டோஸ்ட், ஸ்மூத்தி ஆகியவையே எனது உணவு. பிறகு காலை 11 மணியளவில் கைநிறைய பாதாம், வால்நட்ஸ், கிரீக் யோகர்ட், பிரெஷ்ஷான பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவேன். மதிய உணவுக்கு கிரில்டு சிக்கன், மீன், பிரவுன் ரைஸ், குயினோவா, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், மாலையில் ஒரு கப் மூலிகை தேநீர் குடித்துவிட்டு காய்கறிகள் சாப்பிட்டு முடிப்பேன்.

Related Stories: