- ஜன்யயன்
- சென்னை
- சுதா கொங்கரா
- சிவகார்த்திகேயன்
- ரவிமோகன்
- அதர்வா முரளி
- ஸ்ரீ லீலா
- சேதன்
- ஆகாஷ் பாஸ்கரன்
- டான் பிக்சர்ஸ்
- ஜி. விபிரகாஷ் குமார்
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா, சேத்தன் நடித்துள்ள ‘பராசக்தி’ என்ற படம், வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சிறப்பாக நடந்தது. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியானது. டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ என்ற படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் இருந்தது. கடந்த மாதமே சென்சார் குழுவுக்கு அனுப்பப்பட்ட இப்படத்தை பார்த்த குழுவினர், சில காட்சிகளை நீக்கும்படி சொன்னார்கள். அந்த காட்சிகளை நீக்கி மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில் நேற்று இரவு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் ‘ஜன நாயகன்’ டிரைலர் வெளியாகி 2 நாட்களாகியும், ‘பராசக்தி’ படத்தின் டிரைலர் படைத்த சாதனையை முறியடிக்க முடியாமல் திணறுகிறது.
இதன்மூலம் விஜய்யை பின்னுக்கு தள்ளியதில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிக மகிழ்ச்சியும், விஜய் ரசிகர்கள் பேரதிர்ச்சியும் அடைந்துள்ளனர். மேலும், ‘ஜன நாயகன்’ படத்தின் டிரைலர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ என்ற படத்தின் ரீமேக்தான் இப்படம் என்றும், அதன் டிரைலரில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஜெமினி ஏஐ தொழில்நுட்பத்தின் லோகோ நீக்கப்படாமல் இருப்பதையும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் படக்குழுவினரும், விஜய் தரப்பும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
