ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். தனது முதல் படமான ‘ராஜா வாரு ராணி காரு’ மூலம் பாராட்டுகளை பெற்ற ரவி கிரண் கோலா கதை மற்றும் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை தில் ராஜூ, சிரிஷ் தயாரிக்கின்றனர். ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில், ‘ரவுடி ஜனார்தனா’ என்ற டைட்டில் வெளியிடப்பட்டது. கிறிஸ்டோ சேவியர் இசை அமைக்க, ஆனந்த் சி.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
சுப்ரீம் சுந்தர் சண்டை பயிற்சி அளிக்கிறார். 1980களில் கிழக்கு கோதாவரியை களமாக கொண்ட இப்படம், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஜனார்த்தன் பசுமார்த்தி கூடுதல் திரைக்கதை எழுத, சத்யநாராயணா அரங்கம் அமைக்கிறார்.
