மெடிக்கல் திரில்லர் ‘பல்ஸ்’

குளோபல் பிக்சர்ஸ் சார்பில் அழகராஜ் ஜெயபாலன் தயாரித்துள்ள படம், ‘பல்ஸ்’. நவீன் கணேஷ் இயக்கியுள்ளார். ஹீரோவாக மாஸ்டர் மகேந்திரன் மற்றும் கூல் சுரேஷ், அர்ச்சனா, ‘கும்கி’ அஸ்வின், கேபிஒய் சரத், ஈபி சுந்தர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.அபிஷேக் இசை அமைத்துள்ளார். படம் குறித்து நவீன் கணேஷ் கூறுகையில், ‘கதையின் மீது முழு நம்பிக்கை வைத்து, எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் படத்தை தயாரித்தவருக்கு நன்றி. ஹாஸ்பிட்டல் கதைக்களம் என்பதால், ரியல் லொகேஷன்களில் படப்பிடிப்பு நடத்தினோம். ஆர்ட் டைரக்டர் முகமது, எடிட்டர் சோம் சேகர், ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா ஆகியோரின் பணிகள் பாராட்டுக்குரியது.

‘டைரக்டர்ஸ் ஆர்ட்டிஸ்ட்’ என்று மகேந்திரனை சொல்லலாம். நான் நினைத்ததை அப்படியே திரையில் கொண்டு வந்தார். இப்படத்தின் தலைப்பு ‘பைல்ஸ்’ அல்ல, ‘பல்ஸ்’. மனிதனின் இதயத்துடிப்பு எப்படி தொடர்ச்சியாக இருக்கிறதோ, அதுபோல் இப்படத்தை பார்க்கும்போது பார்வையாளர்களுக்கும் இடைவிடாத பதற்றம் இருக்கும். கூல் சுரேஷ் காமெடியை தாண்டி குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். மெடிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இப்படம், ரிலீசுக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும்’ என்றார்.

Related Stories: