- கோலிவுட்
- சென்னை
- திருக்கூரல் ஃபர்ஸ்ட் ஃபிரேம் 2025
- கலைபுலி எஸ்.தனு
- கே. பாக்யராஜ்
- அரவிந்தராஜ்
- பாண்டிராஜின்
- ராகவ் மிர்தாத்
- சுகுமார் அலகர்சமி
- பாலமுருகன்
- குட்டி ரேவதி
- மணிகண்டன்
- பகவதி பெருமாள்
- கேம்பிரியோ பிக்சர்ஸ்
- மேலாண்மை
- சுகுமார் பாலகிருஷ்ணன்
- ட்ரோட்ஸ்கி மாருது
சென்னை: திரைக்குரல் ஃபர்ஸ்ட் ஃபிரேம் 2025 குறும்பட போட்டியின் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, இயக்குனர்கள் கே.பாக்யராஜ், அரவிந்த்ராஜ், பாண்டிராஜ், ராகவ் மிர்தாத், சுகுமார் அழகர்சாமி, பாலமுருகன், குட்டி ரேவதி, நடிகர்கள் மணிகண்டன், பகவதி பெருமாள், கேம்ப்ரியோ பிக்சர்ஸ் நிர்வாக இயக்குனர் சுகுமார் பாலகிருஷ்ணன், ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோர் விருது விழாவில் கலந்துக்கொண்டனர். பதிவு செய்யப்பட்ட 48 குறும்படங்களில் துணை, ஆலம்நாட், அரைவேக்காடு, காபி வித் அவன்திகா உள்பட 10 குறும்படங்கள் திரையிடப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்வின் துவக்கத்தில் தமிழ் பிலிம் பேக்டரி திரைப்பட தயாரிப்பு மற்றும் மேலாண்மை நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டது. திரைக்குரலின் ஆசிரியர் ஆதவன் யூகே., அறம் மீடியாவின் நிர்வாக செயல் அதிகாரி சுகுமார் கே. ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர்.

