சென்னை: கடந்த வருடம் மோகன்லால் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு எழுந்ததால் திலீப், நான் நடிகர் சங்கத்தில் இப்போது சேரப் போவதில்லை என்று கூறி அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில் நடிகை பலாத்கார வழக்கில் விடுதலை செய்யப்பட்டதால் அவர் நடிகர் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் தான் நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்து, தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்வானார். இந்நிலையில் திலீப்பை சங்கத்தில் சேர்க்க நடிகைகள் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ஸ்வேதா மேனன் கூறும்போது, ‘‘பாதிக்கப்பட்ட நடிகையின் இந்த வழக்கு குறித்து உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்ய இருக்கிறது என தெரிய வந்துள்ளது. எனவே திலீப்பை சங்கத்தில் சேர்க்க எந்த முடிவும் எடுக்கவில்லை’’ என தெரிவித்தார்.
