×

மாட்டிறைச்சி பிரியாணி காட்சியால்; சென்சார் தடை போட்ட படத்துக்கு ஐகோர்ட் அனுமதி

சென்னை: மலையாளத்தில் இளம் நடிகராக வலம் வருபவர் நடிகர் ஷேன் நிகம். தமிழில் ‘மெட்ராஸ்காரன்’, ‘பல்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் தற்போது ‘ஹால்’ என்கிற படத்தில் நடித்தார். இதில் சாக்‌ஷி வைத்யா ஹீரோயின். இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே சென்சாருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் படத்தில் மாட்டிறைச்சி பிரியாணி காட்சி உட்பட மொத்தம் ஆறு காட்சிகளை நீக்கினால் மட்டுமே சான்றிதழ் தர முடியும் என சென்சார் போர்டு அறிவுறுத்தியது.

இதற்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்தார். படம் பார்த்த கீழமை நீதிமன்ற நீதிபதி படத்தில் பிரச்னைக்குரிய அம்சங்கள் எதுவும் இல்லை என்று கூறி ஆறு இடங்களில் காட்சிகளை வெட்ட வேண்டும் என்று சென்சார் போர்டு கூறியதில் நான்கு விஷயங்களை ஒதுக்கி தள்ளிவிட்டு இரண்டு காட்சிகளை மட்டும் வெட்டினால் போதும் என கூறினார். இதனை எதிர்த்து சென்சார் போர்டு உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது.

இதனை தொடர்ந்து இரு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த படத்தை பார்த்தனர். படம் பார்த்துவிட்டு அவர்கள் வழங்கிய தீர்ப்பில் கீழமை நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் எந்தவித மாற்றமும் செய்ய தேவையில்லை, படத்தை நாங்கள் ரசித்துப் பார்த்தோம். கீழமை நீதிமன்ற உத்தரவுப்படி சென்சார் சான்றிதழை வழங்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து படக் குழுவினர் தங்களது படம் சென்சார் தடைகளை தாண்டி கிறிஸ்துமஸ் ரிலீஸ் ஆக வெளியாக இருக்கிறது என்கிற தகவலை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளனர்.

Tags : High Court ,Chennai ,Shane Nigam ,Sakshi Vaidya ,
× RELATED மலையாள நடிகர் சங்கத்தில் திலீப் சேர்க்கப்படுவாரா..? ஸ்வேதா மேனன் பதில்