×

கணவருடன் ஹனிமூன் சென்ற சமந்தா

 

முன்னணி நடிகையும், தயாரிப்பாளருமான சமந்தா, கடந்த 1ம் தேதி இயக்குனர் ராஜ் நிடிமோருவை கோவை ஈஷா யோகா மையத்திலுள்ள லிங்க பைரவி சன்னதியில் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து புதுமண தம்பதிக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்தது.

இந்நிலையில், திருமணத்துக்கு பிறகு முதல்முறையாக கணவர் ராஜ் நிடிமோருவுடன் இணைந்து அவுட்டிங் சென்றுள்ளார், சமந்தா. இது அவர்களின் ஹனிமூன் பயணமாக இருக்கும் என்று தெரிகிறது. எந்த நாட்டுக்கு சென்றுள்ளனர் என்பது குறித்து அவர்களது அடுத்தடுத்த பதிவுகளில் தெரியவரும். தற்போது சமந்தா, ராஜ் நிடிமோரு இருவரும் ஏர்போர்ட்டுக்கு வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags : Samantha ,Raj Nidimoru ,Linga Bhairavi ,Isha Yoga Center ,Coimbatore ,
× RELATED உள்ளே செல்லாதீர்கள்; சந்தானம் வெளியிட்ட பர்ஸ்ட் லுக்