விரக்தியில் ஊரை சுற்றிய ஷான் ரோல்டன்

 

‘மேயாத மான்’, ‘ஆடை’, ‘குலு குலு’ ஆகிய படங்களை தொடர்ந்து ரத்னகுமார் எழுதி இயக்கியுள்ள படம், ‘29’. விது, பிரீத்தி அஸ்ராணி நடித்துள்ளனர். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ், லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் தயாரித்துள்ளது. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். அவர் கூறுகையில், ‘எனது 29 வயதில் நான் எந்த படத்துக்கும் இசை அமைக்கவில்லை. அப்போது நான் மியூசிக்கை விட்டுவிட்டேன். அந்த வருடத்தில் நான் இசை அமைக்கவே இல்லை. யாராவது பாட்டு போட்டாலே எனக்கு எரிச்சலாக இருக்கும். ‘நான் கடவுள்’ ஆர்யா மாதிரி இருந்தேன்.

அதாவது, ரொம்ப சீரியஸாக இருப்பேன். ஆனால், அந்த 29 வயதுதான் சில விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்தது. வாழ்க்கையில் சில விஷயங்களை காமெடியாக எடுத்துகொள்ள வேண்டும் என்று எனக்கு உணர்த்திய வயது 29. வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் இருப்பது நல்லது என்று உணர்ந்தேன். நாம் வாழ்க்கையில் பெரிய ஆளாக வராமல் இருந்தால் கூட பரவாயில்லை என்று எனக்கு தோன்றியதும் அந்த 29 வயதில்தான். இந்த 29 என்ற எண் எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று. அதனால்தான், இப்படத்துக்கு இசை அமைக்க நான் பொருத்தமான நபர் என்று நினைக்கிறேன்’ என்றார்.

 

Related Stories: