- கௌரி கிஷன்
- சென்னை
- எம். எஸ் பாஸ்கர்
- ஆதித்ய பாஸ்கர்
- ராஜ்குமார் ரங்கசாமி
- கௌரி கிஷான்
- சரஸ்வதி மேனன்
- கே
- பாக்யராஜ்
- ரெடின் கிங்ஸ்லி
- டி.எஸ்.ஆர்
- எல். ராமச்சந்திரன்
- எம். எஸ் ஜோன்ஸ்
- ரூபர்ட் இசை
- பாரத் விக்ரமன்
சென்னை: எம்.எஸ். பாஸ்கர் மகன் ஆதித்யா பாஸ்கர் – கவுரி கிஷன் ஆகியோர் 96 படத்துக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்திருக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 1’ எனும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள பெயரிடப்படாத திரைப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், சரஸ்வதி மேனன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, டிஎஸ்ஆர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எல். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு. எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசை. பரத் விக்ரமன் படத்தொகுப்பு. ஆர்ஜின் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கண்ணதாசன் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில், ‘‘உண்மை சம்பவத்தை தழுவி தற்போதைய ஜென் ஜீ தலைமுறையினர் ரசிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இதில் ‘96’ படத்திற்கு பிறகு மீண்டும் ஆதித்யா பாஸ்கர்- கவுரி கிஷன் ஜோடி திரையில் மேஜிக் செய்திருக்கிறார்கள். இது அனைத்து ரசிகர்களையும் கவரும்’’ என்றார்.

