மதுபாலா நடிக்கும் சின்ன சின்ன ஆசை

சென்னை: ‘என்டே நாராயணனுக்கு’ என்ற மலையாள குறும்படத்துக்கு பிறகு வர்ஷா வாசுதேவ் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’ என்ற படத்தில் மதுபாலா, இந்திரன்ஸ் நடித்துள்ளனர். இதன் செகண்ட் லுக் போஸ்டரை மஞ்சு வாரியர் வெளியிட்டார். முன்னதாக பர்ஸ்ட் லுக் போஸ்டரை மணிரத்னம் வெளியிட்டார். பாபுஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் அபிஜித் பாபுஜி தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். வாரணாசியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஃபைஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Related Stories: