சென்னை: தெலுங்கு நடிகர் சுஷாந்துடன் காதலா என்பதற்கு நடிகை மீனாட்சி சவுத்ரி பதிலளித்துள்ளார். ‘சிங்கப்பூர் சலூன்’, ‘கொலை’, ‘கோட்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீனாட்சி சவுத்ரி. நாகார்ஜுனாவின் உறவினரான நடிகர் சுஷாந்துடன் சேர்ந்து ஒரு தெலுங்கு படத்தில் மீனாட்சி சவுத்ரி நடித்தார். அப்போது முதல் இருவரும் காதலிப்பதாக தகவல் பரவியது. இது குறித்து மீனாட்சி சவுத்ரி கூறும்போது, ‘‘சுஷாந்த் எனக்கு நல்ல நண்பர் மட்டும்தான். எங்களுக்குள் காதல் எதுவும் கிடையாது. மாதம் ஒரு முறை எனது காதலர்களை மாற்றி வருவது சிலருக்கு வாடிக்கையாக இருக்கிறது. இது திரைத்துறையில் எனக்கு இருக்கும் நல்ல பெயரை கெடுப்பதற்காக நடக்கும் சதியாகத்தான் தெரிகிறது. இந்த விவகாரத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ளவே நான் விரும்புகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
