×

‘மகாசேனா’வில் அறிமுகமாகும் இசை அமைப்பாளர்

இசை அமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், ரியாலிட்டி ஷோ பாடகர் என்று, பல்வேறு வடிவங்களில் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருபவர், உதய் பிரகாஷ். அடையாறு இசைக்கல்லூரியில் பட்டம் பெற்று, கடந்த 15 ஆண்டுகளாக இசையுலகில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.

தனது தாயின் உறுதியான ஆதரவுடன் மற்றும் நண்பர்களின் ஆதரவுடன் பல்வேறு சவால்களை தாண்டி இசைக்கனவை நனவாக்கியுள்ள உதய் பிரகாஷின் பாடல்கள் பெருமளவில் கவனம் பெறாத நிலையிலும், புதிய வாய்ப்புகளை உருவாக்கும் மனதுடன் பயணத்தை தொடர்ந்தார். தற்போது அவரது மிகப்பெரிய கனவு நனவாகியுள்ளது. அவர் இசை அமைத்த ‘மகாசேனா’ என்ற படம், வரும் 12ம் தேதி திரைக்கு வருகிறது. தனது இசைப்பயணத்தில் இது ஒரு முக்கிய மைல் கல் என்று நம்பும் அவர், இசை அமைத்துக்கொண்டே பாடுவதிலும் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.

Tags : Uday Prakash ,Adyar Music College ,
× RELATED பாடகி சின்மயி மன்னிப்பு கேட்க...