நடிகரைப் பற்றி பேசியவரை அறைந்த மோகன்லால்

சென்னை: மோகன்லால் தன்னை கடும் கோபத்தில் ஆழ்த்திய சினிமா நபர் ஒருவரைப் பற்றி பேசியிருக்கிறார். மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன்லால். ‘எம்புரான்’ படத்தைத் தொடர்ந்து ‘துடரும்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த மாதம் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மோகன்லால் தன்னுடையக் கோபம் குறித்துப் பகிர்ந்திருக்கிறார். “மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராகத் திகழ்ந்த நடிகர் பிரேம் நசீரை ஒரு நபர் தொடர்ந்து 2, 3 மணி நேரமாக விமர்சித்து கொண்டே இருந்தார்.

அந்த நபரின் வதந்திகளை முடிந்தவரைச் சகித்துக்கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் அவர் பேசியதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அவரை அறைந்து விட்டேன். இதுபோன்ற விஷயங்கள் நடக்கும். வேறு வழியில்லாமல் இருக்கும்போதுதான் நீங்கள் ஒருவரை அடிப்பீர்கள், இப்போது கூட, அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால், மீண்டும் அதை நான் செய்வேன். அந்த நபரும் சினிமாக்காரர் என்பதுதான் கொடுமை” என்று மோகன்லால் கூறியிருக்கிறார்.

Related Stories: