தூங்க முடியாமல் அவதிப்பட்ட மதுபாலா

விஷ்ணு மன்ச்சு, மோகன்லால், பிரபாஸ், அக்‌ஷய் குமார், சரத்குமார், மோகன் பாபு, காஜல் அகர்வால், பிரீத்தி முகுந்தன், சம்பத் ராம் நடித்துள்ள ‘கண்ணப்பா’ என்ற பான் இந்தியா படம், வரும் ஜூன் 27ம் தேதி ரிலீசாகிறது. முக்கிய கேரக்டரில் நடித்துள்ள மதுபாலா கூறுகையில், ‘இதில் நடிக்க சிவபெருமான் என்னை தேர்வு செய்ததாக விஷ்ணு மன்ச்சு சொன்னார். மும்பையில் இருந்து நான் வந்தபோது, ‘1990களில் நான் இரண்டு படங்களில் நடிக்க கேட்டேன். ஏன் என்னுடன் நடிக்கவில்லை?’ என்று மோகன் பாபு கேட்டார். இப்போது அவரது படத்தில் நடித்து விட்டேன். அதுபோல், 35 வருடங்களுக்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ளேன். அக்‌ஷய் குமாரின் இந்தி படங்களில் நடித்த நான், இதில் அவருடனும் இணைந்து நடித்துவிட்டேன்.

கதாசிரியர், தயாரிப்பாளர் என்று திறம்பட பணியாற்றிய விஷ்ணு மன்ச்சு, கண்ணப்பா வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். இளம் அம்மா என்ற இமேஜ் எனக்கு இருக்கிறது. அதை இப்படம் உடைத்து, போர் வீராங்கனை என்ற புதிய பிம்பத்தை கொடுத்துள்ளது. நமக்கு பலர் மீது கோபம் இருக்கும். அதை வெளிப்படுத்த முடியாது. இதில் சண்டைக் காட்சியில் எனது கோபத்தை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஒரு கத்தியை என்னிடம் கொடுத்து அடிக்கச் சொன்னதும், எதிரே வந்த அனைவரையும் அடித்து துவம்சம் செய்தேன். அதிக எடை கொண்ட கத்தியை தூக்குவது கஷ்டமாக இருந்ததால், கைகளில் கடுமையான வலி ஏற்பட்டு தூங்க முடியாமல் அவதிப்பட்டேன்’ என்றார்.

Related Stories: