நடிகைகள் பொம்மையா? நித்யா மேனன் கோபம்

சென்னை: தமிழில் கடைசியாக தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்தார் நித்யா மேனன். இப்போது மீண்டும் தனுஷுக்கு ஜோடியாக இட்லி கடை படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் நித்யா அளித்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அளித்த பேட்டியில், ‘‘பலரும் ஒரு சாதாரண பெண்ணிடம் எப்படி நடந்துகொள்கிறார்களோ அப்படி நடிகைகளிடம் நடந்துகொள்வதில்லை.

நடிகை என்றால் ஈஸியாக தொட்டுவிடலாம் என்று நினைக்கிறார்கள். நாங்கள் ஒரு விழாவுக்கு போனால் ரசிகர்கள் கையை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இந்த கேள்வியை சாதாரண பெண்ணிடம் யாருமே கேட்க மாட்டார்கள். ஆனால் நடிகைகளிடம் சாதாரணமாக கேட்கிறார்கள். ஈஸியாக தொட்டுவிட நாங்கள் என்ன பொம்மையா?’’ என்றார். அவரது இந்தப் பேட்டிக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதே சமயம், சிலர் நித்யா மேனனை இதற்காக விமர்சித்தும் வருகிறார்கள்.

Related Stories: