கண்ணப்பா காட்சிகள் லீக் ஆனதற்கு மனோஜ் மன்ச்சு காரணமா? விஷ்ணு மன்ச்சு பரபரப்பு பேட்டி

சென்னை: தெலுங்கு நடிகர் விஷ்ணு மன்ச்சு எழுதி தயாரித்து நடித்துள்ள பிரமாண்டமான பான் இந்தியா படம், ‘கண்ணப்பா’. பிரபாஸ், மோகன்லால், அக்‌ஷய் குமார், சரத்குமார், மோகன் பாபு, காஜல் அகர்வால், மதுபாலா, பிரீத்தி முகுந்தன், சம்பத் ராம், அர்பித் ராணா நடித்துள்ளனர். முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். ஷெல்டன் சாவ், சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்டீபன் தேவஸி இசை அமைக்க, ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார். 24 பிரேம்ஸ் பேக்டரி, ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மோகன் பாபு தயாரித்துள்ளார். வரும் ஜூன் 27ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் நடந்த பிரஸ்மீட்டில் விஷ்ணு மன்ச்சு அளித்த பரபரப்பு பேட்டி: ‘கண்ணப்பா’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் லண்டன், துபாய் மற்றும் இந்தியாவில் 8 இடங்களில் நடக்கிறது. படத்தின் காட்சிகள் அடங்கிய டிரைவ் 2 காப்பிகள் எடுக்கப்படும். ஒன்று எடிட்டிங் ஸ்டுடியோவுக்கும், மற்றொன்று தயாரிப்பு அலுவலகத்துக்கும் அனுப்பப்படும். மனோஜ் மன்ச்சு வீட்டில் இருக்கும் 2 பேர் அதை வாங்கியதாக சொல்லப்படுகிறது. இது எங்களுக்கு தெரியாது. 2 வாரங்களுக்கு பிறகு ‘கண்ணப்பா’ படத்தின் காட்சிகள் லீக் ஆனால் எப்படி இருக்கும் என்ற ஒரு எக்ஸ் தள பதிவு வெளியானது.

அதை வைத்துதான் எங்கள் காட்சிகள் அடங்கிய டிரைவ் கைமாறியிருப்பது தெரிந்தது. எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. எனது தம்பி மனோஜ் மன்ச்சுவுக்கு என்ன பிரச்னை, அவர் ஏன் இப்படி செய்கிறார் என்று தெரியவில்லை. தெரிந்தால் அதை சரிசெய்ய முயற்சிப்பேன். சிவபக்தராக கண்ணப்பா மாறிய பிறகு என்ன நடந்து என்பதையே மற்ற படங்கள் காட்டியிருக்கின்றன. சிவபக்தர் ஆவதற்கு முன்பு அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை இப்படத்தில் பார்க்கலாம்.

Related Stories: