ஜான்வி கபூருக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நடிக்க வந்தவர், ஜான்வி கபூர். இந்தி மற்றும் தெலுங்கில் நடித்து வரும் அவர், இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்பாக இருக்கிறார். இந்நிலையில், வீடியோ ஒன்றை ‘லைக்’ செய்திருப்பது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் திரை இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டு, ஒருபுறம் மாதுரி தீட்சித் நடித்த ‘பீட்டா’ என்ற இந்தி படத்தில் இடம்பெற்ற நடனக் காட்சியான ‘தக் தக் கர்னே லகா’ என்ற பாடல் ஓடுகிறது. மறுபுறம் தேவி நடித்த ‘குதா கவா’ என்ற இந்தி படத்தில் அவர் நடித்த ஒரு காட்சி ஓடுகிறது. மேலும், மாதுரி தீட்சித் ஆடிய மோசமான நடனத்துக்கு ஒரு விருது வழங்கப்பட்டது.

ஆனால், தேவியின் சிறந்த நடிப்பு அங்கீகரிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஸ்ரீதேவியையும், மாதுரி தீட்சித்ைதயும் ஒப்பிட்டு பதிவிடப்பட்ட இந்த வீடியோவை ஜான்வி கபூர் ‘லைக்’ செய்துள்ளார். ஜான்வி கபூரின் இச்செயலை கடுமையாக விமர்சித்தும், ஆதரவு கொடுத்தும் நெட்டிசன்கள் கமென்ட் வெளியிட்டு வருகின்றனர். சிலர் மாதுரி தீட்சித்தின் நடனத்தை ஆதரிக்கின்றனர். சிலர் தேவியின் நடிப்பை பாராட்டுகின்றனர். இன்னும் சிலர், ‘தேவி தென்னிந்தியர் என்பதால் அவர் புறக்கணிக்கப்பட்டு இருக்கலாம்’ என்ற கருத்தை பதிவிட்டுள்ளனர்.

Related Stories: