முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் சூர்யா. அவரும், முன்னணி நடிகை ஜோதிகாவும் காதல் திருமணம் செய்தவர்கள். அவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். தியா, தேவ் ஆகிய இருவரின் பள்ளிப் படிப்புக்காக சூர்யாவும், ஜோதிகாவும் சென்னையில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளனர். சூர்யா, ஜோதிகாவின் இச்செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தமிழ் மட்டுமின்றி இந்தியிலும், மலையாளத்திலும் நடித்து வருவதால், ஜோதிகாவுக்கு மும்பை வீடு பிடித்திருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சூர்யாவின் மூத்த மகள் தியா தனது பள்ளிப் படிப்பை முடித்துள்ளார்.
அதற்கான பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடந்துள்ளது. கையில் சான்றிதழ்களுடன் சூர்யா, ஜோதிகா, சிவகுமார் ஆகியோருடன் கூடிய குடும்ப போட்டோ எடுத்துள்ளனர். இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஜோதிகா பகிர்ந்துள்ள இந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. தங்களுடைய பெற்றோர் திரைத்துறையில் முன்னணி இடத்தில் இருந்தாலும், தங்களுக்கு சினிமா ஆர்வம் துளியளவும் கிடையாது என்று நிரூபித்து, படிப்பில் சாதனை படைத்து வரும் தியா, தேவ் ஆகியோரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.