×

எனை சுடும் பனி: விமர்சனம்

பொள்ளாச்சி பகுதியில் திடீர், திடீரென்று இளம் பெண்கள் கடத்தப்பட்டு, பிறகு கற்பழித்து கொலை செய்யப்படும் சம்பவம் நடந்து வருகிறது. விசாரணை மேற்கொள்ளும் போலீசாருக்கு துப்பு கிடைக்கவில்லை. அப்போது நட்ராஜ் சுந்தர்ராஜின் காதலி உபாசனா ஆர்.சி கடத்தப்படுகிறார். சைக்கோ ஆசாமியால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடும் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நட்ராஜ் சுந்தர்ராஜ், குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

இந்நிலையில், காவல்துறை சிறப்பு அதிகாரி கே.பாக்யராஜும் வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்கிறார். குற்றவாளி யார்? எதற்காக அவன் பெண்களை கடத்துகிறான் என்பது மீதி கதை. உண்மை சம்பவ அடிப்படையில் எழுதி இயக்கிய ராம் சேவா, சமூக வலைத்தளங்கள் மற்றும் பொது இடங்களில் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற மெசேஜை அழுத்தமாக கூறியிருக்கிறார். நட்ராஜ் சுந்தர்ராஜ் யதார்த்தமாக நடித்துள்ளார். உபாசனா ஆர்.சி அழகாக இருக்கிறார், அற்புதமாக நடித்துள்ளார். கே.பாக்யராஜ் வழக்கமான பாணியில் விசாரணையை நடத்தியுள்ளார்.

தலைவாசல் விஜய், சிங்கம்புலி, முத்துக்காளை, கூல் சுரேஷ், பழனி சிவபெருமாள் ஆகியோரும் இயல்பாக நடித்திருக்கின்றனர்.ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், காட்சிகளை விறுவிறுப்பாக பதிவு செய்துள்ளார். பாடல்களிலும், பின்னணி இசையிலும் அருள் தேவ் அதிக கவனம் செலுத்தியுள்ளார். இளம் பெண்களை எச்சரித்தும், சைக்கோ ஆசாமிகளை அடையாளம் காட்டியும் படத்தை உருவாக்கியுள்ளனர். சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் மூலம் ஒரு நல்ல மெசேஜை சொல்லியிருப்பதற்காக பாராட்டலாம். பட உருவாக்கத்தில் இயக்குனர் இன்னும் கூட கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

Tags : Enai Sudum Banai ,Pollachi ,Nataraj Sundarraj ,Upasana RC ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில்...