×

ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் தரைப்படை

சென்னை: பான் இந்தியா கதையம்சத்தோடு உருவாகியுள்ள ‘தரைப்படை’ மார்ச் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஸ்டோனக்ஸ் நிறுவனம் சார்பில் பி.பி.வேல்முருகன் தயாரிப்பில், ராம்பிரபா இயக்கியுள்ள படம் ‘தரைப்படை’. ஜீவா , பிரஜின், விஜய் விஷ்வா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தில் மூன்று அறிமுக நடிகைகள் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். வியாபாரம் என்ற பெயரில் மக்கள் பணத்தை அபகரிக்கும் மோசடி கும்பலிடம் இருந்து கேங்ஸ்டர் கும்பல் அந்த பணத்தை கைப்பற்ற, அவர்களிடம் இருந்து மற்றொருவர், என்று அந்த பணம் கைமாறிக் கொண்டே போகிறது. பல்வேறு வகையில், பல்வேறு மனிதர்களிடம் பயணிக்கும் அந்த பணம் இறுதியில் என்னவானது, என்பதை விறுவிறுப்பான ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் சொல்வதே ‘தரைப்படை’. இப்படத்தை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் விக்கி பிலிம்ஸ் வெளியிடுகிறது.

Tags : Chennai ,India ,B.P. Velmurugan ,Stonex ,Ram Prabha ,Jeeva ,Prajin ,Vijay Vishwa ,
× RELATED பத்ரிநாத்தில் தனக்கு கோயில் உள்ளதாக...