சென்னை: இலங்கையின் முக்கிய பகுதியில் சொந்தமாக தீவு வாங்கியுள்ளார், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். அதில் அவர் சொகுசு வில்லா கட்டுவதற்கு திட்டமிட்டு இருக்கிறார். இலங்கை தெற்கு கடற்கரையில் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவை, கடந்த 2012ல் சுமார் 3.5 கோடி ரூபாய்க்கு வாங்கினார். இலங்கை முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஒருவரது தீவுக்கு அருகில் இருக்கும் அவருடைய தீவு, ஆடம்பர ரியல் எஸ்டேட்டுகளுக்கான முக்கியமான இடமாக மாறியுள்ளது. ஆனால், அந்த தீவை தனியார் வீடாக பயன்படுத்துகிறாரா, வணிக நோக்கத்தில் குத்தகைக்கு விடுகிறாரா என்று தெரியவில்லை.
2006ல் ‘மிஸ் யுனிவர்ஸ் இலங்கை’ பட்டம் வென்ற ஜாக்குலின் பெர்னாண்டஸ், 2009ல் வெளியான ‘அலாடின்’ என்ற காமெடி படத்தில் அறிமுகமானார். பிறகு ‘மர்டர் 2’, ‘ஹவுஸ்ஃபுல் 2’, ‘ரேஸ் 2’, ‘கிக்’ போன்ற ஹிட் படங்களில் நடித்தார். அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.116 கோடி. கடந்த 8 வருடங்களாக அவரது படங்கள் எதுவும் வெற்றிபெறவில்லை. தற்போது ‘ஹவுஸ்ஃபுல் 5’ என்ற படத்தில் நடிக்கிறார்.