அஜித், ரெஜினா நடிக்கும் ‘விடா முயற்சி’ படத்தை பொங்கலுக்கு கொண்டு வரும் அத்தனை வேலைகளிலும் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. அத்துடன் திடீரென அஜித்துக்கு நன்றி கடிதம் எழுதி, அவரது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் பாக்கி இருந்த சிறு படப்பிடிப்பையும் அவர் முடித்துவிட்டார். அதைத்தொடர்ந்து, நீங்கள் நீங்களாக இருப்பதன் மூலம் எங்கள் அனைவருக்கும் வழிகாட்டி, ஊக்கம் மற்றும் ஊந்துதல் அளித்துள்ளீர்கள். முழு குழுவும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது, சார்.
முதல் நாள் முதல் இன்று வரை நீங்கள் எனக்கு அளித்த அன்பு, அக்கறை மற்றும் ஆதரவுக்கு நன்றி. மிகுந்த அன்பும் மரியாதையும்” என அஜித்தை குறிப்பிட்டு கடிதம் ஒன்றை மகிழ்திருமேனி எழுதியுள்ளார். அத்துடன் அஜித்துடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் அவர் ஷேர் செய்துள்ளார்.