ஐதராபாத்: கிரண் திருமலசெட்டி இயக்கத்தில் தர்மா, ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்டவர்கள் நடித்து உருவாகியுள்ள படம் ‘டிரிங்கர் சாய்’. இப்படத்தின் டிரைலர் வெளியாகிய நிலையில் படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் நடத்துள்ளது. அப்போது படத்தின் டிரைலரில், நடிகர் தர்மா, நடிகை ஐஸ்வர்யா சர்மாவின் ஆபாச காட்சி இடம்பெற்றது. அந்த காட்சியில் எப்படி நடித்தீர்கள், இயக்குனர் எப்படி அந்த காட்சி பற்றி கூறினார், உங்கள் பெற்றோர் இதைபார்த்து என்ன சொன்னார்கள் என்றெல்லாம் ஐஸ்வர்யா சர்மாவிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு ஐஸ்வர்யா சர்மா, ‘அந்த காட்சி நிஜத்தில் எடுத்தது இல்லை, தொழில் நுட்ப உதவியுடன் எடுக்கப்பட்டது. நீங்கள் ஜூம் செய்து பார்த்தால் உங்களுக்கே புரியும். என் பெற்றோர்கள் பார்த்தார்கள், அது வெறும் ஆக்டிங் தான் ரியல் கிடையாது என்று கூறினார்கள். அதற்காக நான் கவலைப்படவில்லை. ரசிகர்கள் படத்தை பார்த்து ஆச்சரியப்படுவார்கள்’ என்று ஐஸ்வர்யா சர்மா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.