சென்னை: எம்டி பிக்சர்ஸ் வழங்கும் துரை மகாதேவன் தயாரிப்பில், அருண் பிரசாத் இயக்கத்தில், ஆனந்த் நாக், ஜனனி நடிப்பில், மர்டர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள ‘அறிவான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பிரபு சாலமன், சீனு ராமசாமி, அல்போன்ஸ் புத்திரன், நடிகர்கள் ஆரி அர்ஜுனன், வெற்றி மற்றும் விக்ராந்த் ஆகியோர் இணையம் வழியே வெளியிட்டனர்.
ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, என்கவுன்ட்டரால் வேறு ஊருக்கு மாற்றலாகிறார். அங்கு அடுத்தடுத்து தொடர்ந்து 4 கொலைகள் நிகழ்கிறது. அந்த கொலைகளுக்குப் பின்னால் இருப்பது யார்? அந்த கொலைகளுக்கு காரணம் என்ன என்பதை அவர் கண்டுபிடிக்கிறாரா என்பது தான் இந்த ‘அறிவான்’ படத்தின் கதை.