மும்பை: தனது வீட்டை ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்துக்கு வாடகைக்கு விட்டுள்ளார் ஆமிர்கான். மும்பை பாந்த்ரா பல்லி ஹில் பகுதியில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் ஆமிர்கானுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை 5 வருடத்துக்காக ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார் ஆமிர்கான்.
அதன்படி முதல் வருடம் 6.50 லட்சம் ரூபாயை வாடகையாகவும் இரண்டாம் வருடம் 6.82 லட்சமாகவும் மூன்றாவது வருடம் 7.16 லட்சமாகவும் நான்காவது வருடம் 7.52 லட்சமும் ஐந்தாம் வருடத்தில் 7.90 லட்சமும் என வாடகைத் தொகையை அவர் நிர்ணயித்துள்ளார். இந்த வீட்டில் ஜிம், நீச்சல் குளம், மினி தியேட்டர் வசதிகள் இருக்கிறதாம். இந்த வாடகைத் தொகை தனது மாஜி மனைவி கிரண் ராவுக்கு கிடைக்கும்படி ஆமிர்கான் ஒப்பந்தம் போட்டிருக்கிறாராம்.