சென்னை: வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம், ‘வணங்கான்’. இதுவரை எந்தப் படத்திலும் நடித்திராத வித்தியாசமான கேரக்டரிலும், மாறுபட்ட தோற்றங்களிலும் நடித்துள்ள அருண் விஜய்யுடன் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின், சாயாதேவி நடித்துள்ளனர். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். சாம் சி.எஸ் பின்னணி இசை அமைத்து வருகிறார்.
இப்படத்துக்கு சென்சார் போர்டில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 18ம் தேதி மாலை 5 மணிக்கு நந்தம்பாக்கத்தில் நடைப்பெறவுள்ளது. இவ்விழாவில் பாலா திரையுலகிற்கு வந்து 25 வருடம் நிறவடைந்த நிலையில் அதை கொண்டாடும் விதமாக இந்த விழா அமையவுள்ளது.