இதேபோல் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களும் மோகன்பாபுவின் வீட்டின் முன் திரண்டனர். விசாரணைக்கு பின் வெளியே வந்த போலீசார் நிருபர்களிடம் கூறுகையில், மோகன்பாபு குடும்பத்தினர் போலீசாருக்கு போன் செய்த அழைப்பில் வந்தோம். விசாரணை நடத்தியதில், தங்கள் குடும்பத்தில் சிறுகருத்து வேறுபாடு ஏற்பட்டதாக நடிகர் வீட்டில் இருந்தவர்கள் தகராறு தொடர்பாக எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் விசாரிக்கிறோம் என தெரிவித்துள்ளோம். இவ்வாறு கூறினர்.
இந்நிலையில் இந்த பிரச்னை தொடர்பாக விசாரித்ததில் கிடைத்த தகவல்: மோகன்பாபுவுக்கு விஷ்ணு மன்ச்சு, மனோஜ் மன்ச்சு என்ற மகன்களும் லட்சுமி மன்ச்சு என்ற மகளும் உள்ளனர். இதில் விஷ்ணு, மனோஜ் இருவரும் ஹீரோக்களாக படத்தில் நடிக்கிறார்கள். மோகன்பாபுவுக்கு 600 கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் தனக்கான பங்கைத் தர வேண்டும் எனக் கூறி மனோஜ் மன்ச்சு சில நாட்களாக மோகன்பாபுவிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் சொத்து பிரிப்பது தொடர்பாக எந்த முடிவும் மோகன்பாபு எடுக்கவில்லையாம்.
இந்நிலையில் இது தொடர்பாக நேற்றுமுன்தினம் அவர்கள் வீட்டில் மோகன்பாபுவுக்கும் மனோஜ் மன்ச்சுவுக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் மோகன்பாபுவை மனோஜ் மன்ச்சு தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மனோஜ் மீது புகார் அளிக்கவே மோகன்பாபு தரப்பில் போலீசை அழைத்ததாக சொல்லப்படுகிறது. பதிலுக்கு தந்தை மோகன்பாபு தன்னை தாக்கியதாகவும் மனோஜ் போலீசில் புகார் கூறியுள்ளதாக தெரிகிறது. வீட்டின் முன் மீடியாவின் திரண்டதால், இது சாதாரண கருத்து வேறுபாடு என போலீசாரிடம் சொல்லி மோகன்பாபு சமாளித்திருக்கிறார். இந்த சம்பவம் தெலுங்கி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.