சென்னை: சிறந்த குறும்படங்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். மூவிபஃப், டர்மெரிக் மீடியாவுடன் இணைந்து பிக் ஷார்ட்ஸ் சீசன் 3க்கான குறும்பட போட்டியை நடத்தியது. இதில் நெல்லியன் கருப்பையாவின் பீ லைக் குட்டியப்பா முதல் பரிசான ரூ.5 லட்சம் பரிசை வென்றது. தொடர்ந்து அன்புடென், ரெண்டு, கடவுளே, தி ஸ்பெல் ஆகிய குறும்படங்கள் விருதுகளையும் பரிசுத் தொகையும் வென்றன. டர்மெரிக் மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.மகேந்திரன் கூறுகையில், ‘இது திறமைகளைகளுக்கு ஒரு வாய்ப்பு.
இதன் மூலம் கதை சொல்லக்கூடியவர்களுக்கு எங்கள் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்’ என்றார். இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ், ஹலீதா ஷமீம், அருண்குமார் உள்ளிட்டோர் நடுவர்களாக இருந்தனர். க்யூப் நிறுவன இணை நிறுவனர் ஜெயந்திரா பஞ்சபாகேசன், வெற்றி பெற்ற 5 குறும்படங்களை தமிழ்நாடு முழுவதும் 300 தியேட்டர்களில் திரையிட உள்ளனர்.