தனுஷ், ஏ.ஆர்.ரஹ்மான், ஜெயம் ரவி விவாகரத்து: நடிகைகள் சினேகா, ஐஸ்வர்யா லட்சுமி திடீர் கருத்து

 


சென்னை: தனுஷ், ஏ.ஆர்.ரஹ்மான், ஜெயம் ரவி விவாகரத்து தொடர்பாக நடிகை சினேகா திடீரென கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபலங்களின் விவாகரத்து பற்றித்தான் சமீபகாலமாக செய்திகள் பரவி வருகிறது. தனுஷ், ஐஸ்வர்யா இடையே விவாகரத்து ஆகிவிட்டது. இதை நீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில் ஜெயம் ரவி, ஆர்த்தி இடையிலான விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இதற்கிடையேதான் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்யப்போவதாக அவரது மனைவி சாயிரா பானு தெரிவித்தார். அடுத்தடுத்து இதுபோன்ற விவாகரத்து தகவல்களால் இந்த பிரபலங்களின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சினேகாவிடம் நிருபர்கள் இது தொடர்பாக கேட்டனர். அப்போது அவர், ‘விவாகரத்து என்பது தம்பதியின் தனிப்பட்ட முடிவு. அதில் யாரும் தலையிட முடியாது. விவாகரத்து செய்யும் நடிகர்களுக்கு அறிவுரை கூற முடியாது. அதற்கான அவசியமும் இல்லை. காரணம், அவர்கள் பக்குவப்பட்டவர்கள். அவர்களின் வாழ்க்கை தொடர்பாக முடிவு எடுக்க அவர்களுக்கு முழு உரிமை உள்ளது’ என்றார்.
ஐஸ்வர்யா லட்சுமி கூறும்போது, ‘விவாகரத்து, பிரிவு என்பதெல்லாம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் சிறந்த தருணம் என்றுதான் நான் சொல்வேன்.

எதற்காக பிரிய முடிவு செய்கிறோம். நமது வளர்ச்சிக்காகவும் மன நிம்மதிக்காகவும்தான். அதன் மூலம் ஒரு பெண்ணுக்கு வெற்றியும் நிம்மதியும் கிடைத்தால் அதை விட பெரிய விஷயம் எதுவுமில்லை’ என்றார்.

Related Stories: