×

விடுதலை 2 ஆடியோ வெளியீட்டில் ருசிகரம்: யார் உண்மையான வாத்தியார்? விஜய் சேதுபதி, வெற்றிமாறன் விவாதம்

சென்னை: ஆர்.எஸ் இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி, சேத்தன், ராஜீவ் மேனன், போஸ் வெங்கட், கவுதம் வாசுதேவ் மேனன், தமிழ், கென் கருணாஸ், சூர்யா விஜய் சேதுபதி நடித்துள்ள படம், ‘விடுதலை 2’. இளையராஜா இசை அமைக்க, ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அப்போது சூரி பேசுகையில், ‘முன்பு ’விடுதலை 1’ படம் அனைவருக்கும் பிடித்தது போல், ‘விடுதலை 2’ படமும் பிடிக்கும். 2வது பாகம் என்னை சிறந்த நடிகனாக மேலும் ஒரு படி உயர்த்தும். ‘விடுதலை’க்கு முன், ’விடுதலை’க்கு பின் சூரி என்று என் வாழ்க்கையை மாற்றியவர், வெற்றிமாறன்’ என்றார்.

பிறகு விஜய் சேதுபதி பேசும்போது, ‘சூரி போன்ற ஹீரோவின் படத்தில், எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது முழுக்க, முழுக்க வெற்றிமாறன் மட்டுமே உரிமை கொண்டாடக்கூடிய படம். இதில் நான் வாத்தியாராக நடிக்கிறேன் என்றாலும், எனக்கு உண்மையான வாத்தியார் வெற்றிமாறன்தான்’ என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய வெற்றிமாறன், ‘வெறும் 8 நாட்கள் கால்ஷீட் தேவை என்று விஜய் சேதுபதியை அழைத்து வந்து 120 நாட்கள் நடிக்க வைத்திருக்கிறேன். இப்படத்தின் மூலம் அனைவரும் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டோம். அந்தவகையில் நான் வாத்தியார் இல்லை. ‘விடுதலை’தான் வாத்தியார். அது நிறைய கற்றுக்கொடுத்தது. இன்னும் நிறைய கற்றுக்கொடுக்கும்’ என்றார்.

Tags : Vijay Sethupathi ,Vetrimaran ,CHENNAI ,Elred Kumar ,RS Infotainment ,Suri ,Manju Warrier ,Bhavani ,Chetan ,Rajeev Menon ,Bose Venkat ,Gautham Vasudev Menon ,Tamil ,Ken Karunas ,Surya Vijay Sethupathi… ,
× RELATED பரத் நடிப்பில் காளிதாஸ் 2