- சென்னை
- சிவன்
- வாகை சந்திரசேகர்
- கருணாகரன்
- Radaravi
- செல்வி
- பாஸ்கர்
- அருள்தாஸ்
- ரமேஷ் திலக்
- யோக் ஜே.பி
- ஹரிஷா ஜஸ்டின்
- கராத்தே கார்த்தி
- கல்கி
- திருக்குமரன் பொழுதுபோக்கு
சென்னை: சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ், ரமேஷ் திலக், யோக் ஜேபி, ஹரிஷா ஜஸ்டின், கராத்தே கார்த்தி, கல்கி நடித்துள்ள படம், ‘சூது கவ்வும் 2’. வரும் 13ம் தேதி திரைக்கு வருகிறது. திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார், தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ்.தங்கராஜ் தயாரித்துள்ளனர். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்துள்ளார். எட்வின் லூயிஸ் விஸ்வநாத், ஹரி இசை அமைத்துள்ளனர். எஸ்.ஜே.அர்ஜூன் இயக்கியுள்ளார். சண்முகம் சினிமாஸ் கே.சுரேஷ் வெளியிடுகிறார்.
படம் குறித்து பட நாயகன் சிவா கூறியதாவது: ‘சூது கவ்வும்’ முதல் பாகம், கல்ட் பிலிம். ‘சூது கவ்வும்: நாடும் நாட்டு மக்களும்…’ 2ம் பாகம் ஃபன் பிலிம். இதில் நான் நடிக்கிறேன் என்றாலும், இது ‘சூது கவ்வும்’ படத்தின் ப்ரீகுவலாக உருவாகிறது. அதற்குப் பிறகு தற்போதைய படத்துடன் தொடர்பு ஏற்படும். திரைக்கதை எனக்கு மிகவும் பிடித்தது. அந்த கதைக்குள் வருவது, கருணாகரனை சந்திப்பது உள்பட பல சுவாரஸ்யமான திருப்பங்கள் இருக்கிறது. இதன் 3வது பாகம், ‘சூது கவ்வும்: தர்மம் வெல்லும்’ என்ற பெயரில் உருவாகிறது. அதிலும் நாங்கள் இருப்போம்.