சம்பந்தி ஹீரோ… மாப்பிள்ளை டைரக்டர்…அர்ஜூன் ‘கலகல’

சென்னை: ‘மிக மிக அவசரம்’, ‘மாநாடு’ ஆகிய படங்களை தொடர்ந்து சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள படம், ‘ராஜாகிளி’. தம்பி ராமய்யா கதை, வசனம், பாடல்கள் எழுதி இசை அமைத்து ஹீரோவாக நடித்துள்ளார். அவரது மகன் நடிகர் உமாபதி ராமய்யா இயக்குனராக அறிமுகமாகிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, ஸ்வேதா, சுபா, பிரவீன், முபாஸிர், மூர்த்தி நடித்துள்ளனர். வருகிற டிசம்பர் 13ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அர்ஜூன் கலகலப்பாக பேசியதாவது:

இதில் நான் நடிக்கவில்லை என்றாலும், இது எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படமாகும். இது என் குடும்பப்படம். காரணம், எனது சம்பந்தி தம்பி ராமய்யா ஹீரோ… என் மாப்பிள்ளை உமாபதி ராமய்யா டைரக்டர். நான் கூட இதுவரை நடித்திருக்காத அளவுக்கு ஒரு ரொமான்டிக் பாடலில் தம்பி ராமய்யா நடித்துள்ளதாக சொன்னார்கள். நானும், என் மாப்பிள்ளையும் இணைந்திருக்கும் முதல் மேடை இது. இனி நிறையவே பார்ப்பீர்கள். எங்களது கூட்டணியில் பல படங்கள் உருவாகும். சொல்வதை விட செய்து காட்டுவோம். சுரேஷ் காமாட்சி சில நல்ல நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து விடுகிறார். ஆனால், இன்றுவரையில் என்னை அழைக்கவேஇல்லை. காரணம் என்ன?

Related Stories: