×
Saravana Stores

நானும் தாயாக ஆசைப்படுகிறேன்: சொல்கிறார் தமன்னா

மும்பை: தென்னிந்திய படவுலகம் மற்றும் பாலிவுட்டில் திரைப்படங்களிலும், வெப்தொடரிலும் நடித்து வரும் தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் தீவிரமாக காதலிக்கின்றனர். ஆனால், திருமணம் எப்போது என்று கேட்டால் மட்டும் பதில் சொல்வது இல்லை. சமந்தா சொன்னதைப் போல், தானும் தாயாக விரும்புவதாக தமன்னா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: மற்றவர்களின் வீட்டில் என்ன சொல்கிறார்களோ, அதுபோலவே என் வீட்டிலும் விரைவில் என்னை திருமணம் செய்து, வாழ்க்கையில் செட்டிலாகும்படி பெற்றோர் வற்புறுத்தி வருகின்றனர். எனக்கும் கூட திருமணம் செய்துகொண்டு, குடும்பத்தலைவி யாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பிறகு தாயாக வேண்டும் என்றும் விருப்பம் இருக்கிறது.

ஆனால், தற்போது சினிமாவிலும், வெப்தொடரிலும் கவனம் செலுத்தி வருவதால், என் சொந்த வாழ்க்கைக்காக நேரத்தை ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறேன். பிசியாக இருப்பதால், ஒருநாளில் ஒருமுறை கூட எனது பெற்றோரிடம் செல்போனில் பேச முடியாத நிலையில் இருக்கிறேன். ஷூட்டிங்கில் இருந்தால் நேரம் போவது மட்டுமின்றி, என்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பது கூட தெரியாது. அப்படி தெரிந்துகொள்ள விரும்புவது கிடையாது. திரைத்தொழிலை இந்தளவுக்கு நான் நேசிப்பதற்கு முக்கிய காரணம், எனது பெற்றோர் மற்றும் எனது ரசிகர்களின் அன்பு என்பதை எந்தவொரு நிலையிலும் மறந்துவிட மாட்டேன்.

 

Tags : Tamanna ,Mumbai ,Tamannaah ,Bollywood ,Vijay Varma ,Samantha ,
× RELATED ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பை போலீஸ் வழக்குபதிவு