×
Saravana Stores

ராக்கெட் டிரைவர் விமர்சனம்

ஆட்டோ ஓட்டும் விஷ்வத், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் போல் நாடே போற்றும் விஞ்ஞானியாக விரும்புகிறார். ஆனால், யதார்த்த வாழ்க்கை அவரது கனவை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் அவர், 2023ல் சிறுவயது அப்துல் கலாமை சந்திக்கும் வாய்ப்பு அமைகிறது. யார் இந்த அப்துல் கலாம்? நிகழ்காலத்தில் அவர் திரும்பி வர என்ன காரணம்? அவரது எண்ணம் ஈடேறியதா என்பதை ஃபேண்டஸி ஜானரில் சொல்லியிருக்கிறது படம்.

எதிர்பார்த்த வாழ்க்கை அமையாத விரக்தியில் ஆட்டோ ஓட்டும் விஷ்வத், சிறுவயது அப்துல் கலாமை சந்தித்த பிறகு வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருப்பதாக நம்புவது இயல்பு. நன்கு நடித்துள்ள அவருக்கு டிராபிக் கான்ஸ்டபிள் சுனைனா மட்டுமே சற்று ஆறுதலான நட்பு. கெஸ்ட் ரோலில் வரும் சுனைனா அழகாக இருந்தாலும், எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து செல்கிறார். சிறுவயது அப்துல் கலாமாக வரும் நாக விஷாலின் இயல்பான நடிப்பும், பேசும் வசனங்களும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இவர், ‘கே.டி (எ) கருப்புதுரை’ படத்துக்காக தேசிய விருது பெற்றவர்.

அப்துல் கலாமின் நண்பர் சாஸ்திரியாக வரும் காத்தாடி ராமமூர்த்தி, அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். ஜெகன், ராம்ஸ் அந்தந்த கேரக்டருக்குப் பொருந்தியுள்ளனர். சிறுவயது அப்துல் கலாம் கதைக்குள் என்ட்ரியானவுடன், அடுத்து என்ன என்ற சஸ்பென்ஸ் ஏற்படுகிறது. ஆனால், திரைக்கதையின் பலவீனத்தால் எல்லா காட்சியும் வசனங்களால் கடந்து சென்றுவிடுகிறது. கடைசியாக டைரியில் கலாம் எழுதி வைத்த விஷயம் சிறியது என்றாலும், அதுவே படத்தின் மையப்புள்ளி. பிரசாந்த்.எஸ் வசனங்கள் இயல்பாக இருக்கின்றன. ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவும், கவுஷிக் கிரிஷ் இசையும் பலம் சேர்த்துள்ளன.

The post ராக்கெட் டிரைவர் விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vishwat ,President ,Abdul Kalam ,Abdul… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அப்துல் கலாம் பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து