×

வி ம ர் ச ன ம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் துணிச்சலான, நேர்மையான போலீஸ் அதிகாரியான அதியன் (ரஜினிகாந்த்), கொலை மற்றும் கொள்ளை, கஞ்சா கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் தாதாக்களை எல்லாம் பாரபட்சம் பார்க்காமல் என்கவுன்டர் செய்வதில் ஸ்பெஷலிஸ்ட். அவரிடம் அரசு பள்ளி ஆசிரியை சரண்யா (துஷாரா விஜயன்), தான் பணியாற்றும் பள்ளியில் சிலர் கஞ்சா பதுக்கி வைத்தது குறித்து கடிதத்தில் தெரிவிக்கிறார். பிறகு சென்னைக்கு டிரான்ஸ்பர் கேட்டு வரும் அவர், திடீரென்று சமூக விரோதியால் பள்ளி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்படுகிறார். அதுபற்றி ரஜினிகாந்த் விசாரிக்கும்போது, ராணா டகுபதியின் ‘நாட் அகாடமி’யின் கல்விக்கொள்கை மோசடி குறித்து தெரியவந்து அதிர்ச்சி அளிக்கிறது. இந்நிலையில், என்கவுன்டரை எதிர்க்கும் நீதிபதி அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் பணியில் குறுக்கிடுகிறார். பிறகு துஷாரா விஜயனைக் கொன்றவரை ரஜினிகாந்த் கண்டுபிடித்தாரா, ராணா டகுபதியை என்கவுன்டர் செய்தாரா என்பது மீதி கதை.

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக கெத்து காட்டி நடித்திருக்கும் ரஜினிகாந்த், ‘குறி வெச்சா இர விழணும்’ என்று பன்ச் டயலாக் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். ‘தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி’ என்று நம்பும் அவரும், ‘என்கவுன்டரை விட மனித உரிமைகளே முக்கியம்’ என்பதில் உறுதியாக இருக்கும் அமிதாப் பச்சனும், அவர்களுக்கு இடையிலான முரண்பாடுகளும் விறுவிறுப்பாக இருக்கிறது. ேகார்ட்டில் சந்திக்கும் காட்சிகள் முக்கியமானவை. போலீஸ் இன்பார்மராக துறுதுறுப்பான கேரக்டரில் பஹத் பாசில் கவனிக்க வைக்கிறார். ரஜினிகாந்த் மனைவியாக வரும் மஞ்சு வாரியர், தாக்கிய அடியாட்களை துப்பாக்கியால் சுட்டு அதிர வைக்கிறார். போலீஸ் அதிகாரிகளாக ‘ஆடுகளம்’ கிஷோர், ரித்திகா சிங், ராவ் ரமேஷ், ஷாஜி சென், அமைச்சராக அருள் டி.சங்கர், கல்வியாளராக ராணா டகுபதி, அவரது அகாடமி சீஃப் ஆக அபிராமி, ரஜினிகாந்துக்கு உதவுபவராக ரோகிணி ஆகியோர் கேரக்டருக்கேற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.

சரண்யாவாக துஷாரா விஜயன் அழுத்தமான கேரக்டரில் நெஞ்சை கனக்கச் செய்கிறார். ‘மனசிலாயோ…’ பாடலிலும், பின்னணி இசையிலும் அனிருத்தின் முத்திரை பளிச்சிடுகிறது. எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவில் என்கவுன்டர், போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் காட்சிகள் இயல்பாக இருக்கின்றன. காமெடி இல்லை, காதல் இல்லை, ட்விஸ்ட் இல்லை என்றாலும், சமூக அக்கறையுடன் கதை எழுதி த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். முதல்முறையாக தமிழுக்கு வந்த அமிதாப் பச்சனை இன்னும் வலிமையாகப் பயன்படுத்தி இருக்கலாம். இப்படம் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அட்வான்ஸ் தீபாவளி விருந்து.

 

The post வி ம ர் ச ன ம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mur Sanam ,Adhiyan ,Rajinikanth ,Kanyakumari ,Sharanya ,V ,Mar Sanam ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED முரசொலி செல்வம் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்