விமர்சனம்

தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குனர் என்கிற சம்யுக்தா விஜயன் எழுதி இயக்கி நடித்துள்ள படம், ‘நீல நிறச் சூரியன்’. பிறப்பால் ஆண் என்றாலும், ஹார்மோன் கோளாறு காரணமாக வேறு பாலினத்தவராக மாறுபவரை திருநங்கையாகப் பார்க்கும் சமூகம், அவரை ஒரு ஆணாகவோ, பெண்ணா கவோ அங்கீகரிப்பதில்லை. சிறு வயது முதல் தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்து வளர்ந்து ஆளாகி, கல்லூரியில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றும் அரவிந்த், பிறகு பானுவாக மாறுவது எப்படி? அதை சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை நெஞ்சம் நெகிழச் சொல்கிறது படம். அரவிந்த், பானு ஆகிய கேரக்டர்களில் சம்யுக்தா விஜயன் 100 சதவீதம் வாழ்ந்துள்ளார். அவரே எழுதி இயக்கியதால், வேற்று பாலினத்தவரின் வலியை மட்டுமே சொல்லாமல், சிறப்பான மேக்கிங் மூலம் அவர்களின் உணர்வுகளை துல்லியமாகக் கடத்தியுள்ளார்.

பெண்ணாக மாறியதும் அவர் எதிர்கொள்ளும் வாழ்க்கை, ஒவ்வொரு கணமும் மற்றவர்களால் நசுக்கப்படு வதைக் கண்டு கலங்கும்போது, பார்வையாளர்களின் இதயம் நொறுங்குகிறது. சம்யுக்தா விஜயன் பெற்றோர் கஜராஜ், கீதா கைலாசம் மற்றும் பிரசன்னா பாலசந்திரன், கே.வி.என்.மணிமேகலை, கிட்டி, மஷாந்த் நடராஜன், ஹரிதா, ‘வின்னர்’ ராமச்சந்திரன், மோனா பத்ரா, செம்மலர் அன்னம், வைத்தீஸ்வரி, கவுசல்யா சரவணராஜா என்று, அனைவரும் தங்களது கேரக்டரில் இயல்பாகப் பொருந்தியுள்ளனர். ஒளிப்பதிவு செய்து, இசை அமைத்து, எடிட்டிங் செய்துள்ள ஸ்டீவ் பெஞ்சமின், இப்படத்தை தாங்கி நிற்கும் தூண். ஹார்மோன் குறைபாடு என்பது வழக்கமான ஒரு நோய். ஆனால், சமூகத்தில் வேறு பாலினத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னையை உள்ளது உள்ளபடியே சொன்ன இயக்குனர் சம்யுக்தா விஜயன், அதற்கான தீர்வை சொல்ல முடியாமல் படத்தை முடித்து இருப்பது, இந்நிலை என்று மாறும் என்ற கேள்வியைக் கேட்க வைத்து இருக்கிறது. சில காட்சிகளை நீளமாகப் படமாக்கியதை மட்டும் தவிர்த்திருக்கலாம்.

The post விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: