சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் ஸ்ரீ லீலா, அதர்வா

சென்னை: சிவகார்த்தி கேயன் தற்போது முன்னணி இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் முதலில் சூர்யா நடிக்கவிருந்த நிலையில், அவருக்குப் பதிலாக இந்தக் கதை தற்போது சிவகார்த்தி கேயனிடம் வந்துள்ளது.இந்நிலையில், இப்படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த வேளையில், துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா முக்கியமான கேரக்டரில் நடிக்க இருந்தனர். ஆனால், தற்போது சூர்யா படத்தில் இருந்து விலகியுள்ள நிலையில், அவர்களும் வெளியேறிவிட்டனர்.

இந்த கதாபாத்திரங்களில் நடிக்கப்போகும் நடிகர், நடிகை பற்றி லேட்டஸ்ட் அப்டேட்டுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனின் தம்பி கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்கிறார் என்றும், மேலும் ஸ்ரீ லீலா இப்படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. விரைவில் இந்தப்படம் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

 

The post சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் ஸ்ரீ லீலா, அதர்வா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: