தமிழ்நாட்டில் இதுவே முதல்முறை. ரயில் நிலையம், கோயில் போன்ற மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் வெளிப்புற படப்பிடிப்பிற்காக நீண்ட நாட்கள் அனுமதி கிடைக்காத பட்சத்தில் அங்கு ஓரிரு நாள் படப்பிடிப்பு நடத்திய பிறகு, பிரத்யேக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எஞ்சிய படப்பிடிப்பை இந்த ஸ்டுடியோவில் முடித்து கொள்ளலாம். ஏஐ தொழில்நுட்பம் இங்கு பயன்படுத்தப்படும். இந்த தொழிநுட்பத்தால் வேலை இழப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’என்றார். புதிதாக திறக்கப்பட்டுள்ள ஸ்டூடீயோவில் 1.9 பிக்சல் தடத்திற்கு உட்பட்ட முதன்மையான LED ஸ்கிரீன், 40 அடி நீளமும், 20 அடி உயரமும் கொண்டுள்ளது. சிறந்த கேமராக்கள், டிராக்கிங் அமைப்பு, பல்வேறு விதமான ஒளியமைப்புகள் என முக்கிய வசதிகள் உள்ள ஸ்டூடியோவில், விரைவாக படக்காட்சிகளை பதிவேற்றம் செய்து, நேரடியாக எடிட் செய்யும் நவீன வசதிகளும் இடம் பெற்றுள்ளன.
The post ஹாலிவுட் பாணியில் சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானின் கிராபிக்ஸ் ஸ்டுடியோ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.