பஹத் பாசில், எஸ்.ஜே.சூர்யா இணையும் படம்

 

சென்னை: பஹத் பாசில், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார். ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதற்கிடையே ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய லோகேஷ் கனகராஜ், இந்த நிறுவனத்தில் மற்ற இயக்குனர் களுக்கு வாய்ப்பு தர முடிவு செய்துள்ளார். அதன்படி பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தை தயாரிக் கிறார்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’, கார்த்தி நடித்த ‘சுல்தான்’ ஆகிய 2 படங்களை பாக்யராஜ் கண்ணன் இயக்கி இருந்தார். தற்போது இயக்கும் படத்தில் பஹத் பாசில், எஸ்.ஜே.சூர்யா நடிக்கின்றனர். இப்படத்துக்கு ‘பென்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ‘உறியடி’ விஜயகுமார் நடித்த ‘ஃபைட் கிளப்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்திருந்தார்.

The post பஹத் பாசில், எஸ்.ஜே.சூர்யா இணையும் படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: