பெரம்பலூர், ஜூலை 30: பெரம்பலூர் அரசு இசைப் பள்ளியில் செயல்பட்டு வரும் பகுதி நேர, நாட்டுப்புற கலை பயிற்சி மையத்தில், நாட்டுப்புற கலை பயிற்சி பெற்றவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்றது. கடந்த கல்வி ஆண்டில் பயிற்சி பெற்ற 17 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என இரு பாலருக்கும் கரகாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம் போன்ற பயிற்சிகள் இந்த நாட்டுப்புற கலை பயிற்சி மையத்தில் அளிக்கப்பட்டது. இதில் பயிற்சி பெற்றவர்களுக்கு ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக் கழகத்தின் சார்பில், செய்முறைத் தேர்வு பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் நடைபெற்றது.
இந்தத் தேர்வுக்கு பெரம்பலூர் அரசு இசைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். இதில் கரகாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம் போன்ற பயிற்சி பெற்றவர்கள் இந்த செய்முறைத் தேர்வில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஆக.9ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. இதில் பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி மையத்தின் ஆசிரியர்கள் மருததுரை (கரகம்), ஜெகதீசன் (சிலம்பம்), சின்னதுரை (தப்பாட்டம்), ஒருங்கிணைப்பாளர் நடராஜன் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர்.
The post பெரம்பலூர் அரசு இசைப்பள்ளியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு செய்முறை தேர்வு appeared first on Dinakaran.
