நாகை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பாலின உளவியல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

 

நாகப்பட்டினம், ஜூலை 30: நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ளக புகார் குழு மற்றும் பாலின உளவியல் குழு சார்பில் பாலின உளவியல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு முதல்வர் அஜிதா தலைமை வகித்தார். வானவில் தொண்டு நிறுவன இயக்குநர் ரேவதி பேசினார். உடற்கல்வி இயக்குனர் மற்றும் பாலின உளவியல் குழு உறுப்பினர் சின்னையன் நோக்க உரையாற்றினார்.

உள்ளக புகார் குழு மற்றும் பாலின உளவியல் குழு உறுப்பினர்களான வணிகவியல் துறை பேராசிரியர் சாவித்திரி வரவேற்றார். வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் செல்வகுமாரி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். கணிதவியல் துறை பேராசிரியர் சரஸ்வதி நன்றி கூறினார்.இரண்டாமாண்டு வணிக நிர்வாகவியல் துறை மாணவி சந்தோஷினி கருத்தரங்கத்தை தொகுத்து வழங்கினார்.

The post நாகை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பாலின உளவியல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: