வேதாரண்யம், ஜூலை 29: வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை கோடிமுத்து மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற செடில் உற்சவத்தில், ஏராளமான குழந்தைகளை ஏற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கிராமத்தில் உள்ள கோடிமுத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலின் ஆடி திருவிழா கடந்த 18ம் தேதி தொடங்கியது. நேற்று ஒன்பதாம் நாள் நிகழ்வில் 23ம் ஆண்டாக செடில் உற்சவம் நடைபெற்றது. இந்த செடில் உற்சவத்தில் கோயில் முன்பு காத்தவராயன் சுவாமி நிறுத்தப்பட்டார்.
பின்பு காத்தவராயன் வேடமணிந்தவர் குழந்தைகளை செடிலில் சுற்றி பக்தர்களின் நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்.இந்த செடில் திருவிழாவில் கோடிக்கரை, கோடியக்காடு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் தங்கள் குழந்தைகளை செடிலில் ஏற்றி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்த செடியில் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
The post கோடியக்கரை முத்துமாரியம்மன் கோயிலில் குழந்தைகளை செடிலில் ஏற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.
