கோவை, ஜூலை 29: பிரேசில் நாட்டை சேர்ந்தவர் பெர்னால்டோ (60). இந்தோனேசியாவில் சி சர்பிங் பயிற்சியாளராக உள்ளார். இவர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த அவரது நண்பர்கள் சிலர் கோவை பிரகதி மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். எனவே அவரும் கோவை பிரகதி மருத்துவமனைக்கு வந்தார். டாக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் அவருக்கு வெற்றிகரமாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 2 நாட்களில் எழுந்து நடக்க ஆரம்பித்தார். 15 நாட்கள் கழித்து சொந்த ஊர் திரும்பினார்.
தற்போது அவர் நலமாக வலி இன்றி சீ சர்பிங் செய்து வருகிறார். கோவை பிரகதி மருத்துவமனை மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரு சிறப்பான மருத்துவமனை. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் வந்து மூட்டு மாற்று அறுவை செய்து கொண்டுள்ளனர்.
The post பிரகதி மருத்துவமனையில் பிரேசில் நாட்டை சேர்ந்தவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை appeared first on Dinakaran.
