சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தின் மேலாளர் அறைக்கு, நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில், ஒரு இமெயில் வெளிநாட்டில் இருந்து வந்திருந்தது. அதில், விமான நிலையத்தின் விவிஐபி பகுதி மற்றும் விமான நிலைய கழிவறைகளில், சக்தி வாய்ந்த நைட்ரிக் 9 என்ற வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருக்கிறோம். அந்த வெடிகுண்டுகள் சிகரெட் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அது வெடித்து சிதறும், என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று அதிகாலை வரை, சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து விடிய விடிய நடந்தது. ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. இதனால் இது வழக்கமான புரளி என்று பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கிடையே பயணிகளுக்கு இதைப்போல் கூடுதல் சோதனைகள் நடத்தியதால், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் துபாய், சிங்கப்பூர், ஹாங்காங், இலங்கை, ஃபிராங்பார்ட், தோகா, சார்ஜா உள்ளிட்ட சர்வதேச விமானங்கள், சுமார் 30 நிமிடங்களில் இருந்து, ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

The post சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: