இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்த நிலையில், மூன்றாவது முறையாக அவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேவநாதன் யாதவுக்கு சொந்தமாக சுமார் இரண்டு ஆயிரம் கிலோ தங்கம் இருந்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள சொத்து ஆவணங்களில் அந்த தங்கம் குறித்து குறிப்பிடப்படவில்லை. அந்த தங்கம் இருந்தாலே, தங்களுக்கு வட்டியுடன் பணத்தை திரும்ப அளிக்க முடியும் என்று தெரிவித்தனர். பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவு போலீசார் சார்பில் ஆஜரான, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், நீதிமன்ற உத்தரவுப்படி தேவநாதன் யாதவ் தாக்கல் செய்த முன்னூறு கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்களை ஆய்வு செய்ததில் பாதிக்கும் அதிகமான சொத்துக்கள் வில்லங்க சொத்துக்கள் என்று தெரிய வந்ததுள்ளது.
அவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள பங்குகளின் மதிப்பும் குறைந்து வருகிறது என்று தெரிவித்தார். இதனையடுத்து, காவல்துறை வாதம் குறித்து ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேவநாதன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி அன்றைய தினம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும். பாதிக்கப்பட்ட அனைத்து முதலீட்டாளர்களின் நலனும் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார்.
The post தேவநாதன் யாதவ் இயக்குனராக இருந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த அனைவரின் நலன் பாதுகாக்கப்படும்: சென்னை உயர் நீதிமன்றம் உறுதி appeared first on Dinakaran.
