சென்னை: புதிதாக பதவியேற்ற எம்பிக்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: “I belong to the Dravidian stock” என அண்ணா முழங்கிய நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுகவின் வாதங்களை தமிழ்நாட்டின் உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்கும் நமது எம்.பி.,க்கள். திராவிடத் தூணாக முழங்கி விடைபெற்ற வைகோவின் உரையில் உள்ளம் உருகி நெகிழ்ந்தேன்.
சண்முகம், எம்.எம்.அப்துல்லா ஆகியோரது பணிகளுக்கு பாராட்டும் – எம்.பி.,யாகத் தொடரும் மூத்த வழக்கறிஞர் வில்சன், புதிய குரலாக ஒலிக்கவுள்ள அருமை நண்பர் கமல்ஹாசன், சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோருக்கும் வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post புதிதாக பதவியேற்ற எம்பிக்களுக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.