வெள்ளூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

சிவகாசி, ஜூலை 26: சிவகாசி ஊராட்சி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சியில் 2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. மூத்த குடிமகன் சண்முகராஜ் தலைமை வகித்தார். தனி அலுவலரும் வட்டார வளர்ச்சி அலுவலருமான மீனாட்சி முன்னிலை வகித்தார். இத்திட்டம் குறித்தும் சமூக தணிக்கையின் நோக்கம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் ரமேஷ் தலைமையில் சசிகலா, பாக்கியலட்சுமி, கனகலட்சுமி குழுவினர் தணிக்கை மேற்கொண்டனர்.

பற்றாளராக பணி மேற்பார்வையாளர் மாரியப்பன் கலந்து கொண்டார். திட்டப் பயனாளிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்ட நிகழ்வுகள் அனைத்தும் பஞ்சாயத்து நிர்ணே செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பயனாளிகளின் கோரிக்கை பெறப்பட்டு புதிய வேலை அட்டை வழங்கப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டி நன்றி கூறினார்.

 

The post வெள்ளூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: